சீன நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள் உயிரோடு இருக்கும்போது இதயம் வெட்டப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய ஆய்வில், சீனா முழுக்க சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் உயிரோடு இருக்கும் போது அவர்களின் இதயம் வெட்டி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள், உயிருடன் இருக்கும்போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் எடுத்து விடுகின்றனர்.
அதன்பிறகு, இதயம் தானம் செய்யப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றாமல் அவர்கள் உயிருடன் இருக்கும்போது உடல் உறுப்புகளை அகற்றி மருத்துவர்கள் கைதிகளை கொல்வதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சீனாவின் நீதித் துறையின் சார்பில் மருத்துவர்கள் தான் கைதிகளது இதயத்தை நீக்கி மரண தண்டனை நிறைவேற்றுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் 71 பேருக்கு இதயம் அகற்றப்பட்ட நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தெரியவந்திருக்கிறது.