பெரம்பலூர் மாவட்டம் எசனை காட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கட்டிட தொழில் செய்து வருகிறார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் திருமணம் செய்துள்ளார். ஆனால் மணிகண்டன் தாயாரின் செயல்கள் கவிதாவிற்கு பிடிக்காததால் அடிக்கடி கவிதா மற்றும் மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கவிதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கவிதா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.