ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு பகுதியில் வசித்து வரும் முரளி(29) என்ற வாலிபர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் முரளி ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றுள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் தாய் உடனடியாக மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முரளி சிறுமியுடன் தனது சொந்த ஊரான ஆழியாற்றில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்ட போலீசார் முரளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.