Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அசுர விலையில் உயரும் பெட்ரோல்…. மத்திய அரசை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  அண்ணா சிலையில் அருகே வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசுர விலையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக விலையை கட்டுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், பள்ளிபாளையம் அருணாச்சலம், நகர தலைவர்கள் ஜானகிராமன், ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் மல்லை கிருஷ்ணன், அல்லிமுத்து, காசிவிஸ்வநாதன், குமாரபாளையம் தங்கராஜ், காமாட்சி, பேரூராட்சி தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, சிங்காரம் உள்பட பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |