Categories
உலக செய்திகள்

பெரு நாட்டில் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்… ஊரடங்கு நடைமுறைப்படுத்திய அதிபர்…!!!

பெருவில் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் அதிகரித்த நிலையில் நேற்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், கச்சா எண்ணெய் விலை பல நாடுகளில் அதிகரித்திருக்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே உணவு பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, பெரு நாட்டில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்த ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகரில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் சுங்கச்சாவடிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

எனவே, அந்நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக  ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். அதன்படி நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு வரை மக்கள் வீட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |