தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே தாழக்குடி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவரது மகனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லை. இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.