முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட திமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்தது. இதனை கண்டித்து அதிமுக நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அந்த வகையில் புதுக்கோட்டையில் சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட திமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Categories
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட… அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு….!!!!
