தெலுங்கானா மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஒருநாள் கூட ஏன் குறைந்தது ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
தற்போது தெலுங்கானா மாநிலத்தில் வடக்கு மின் வினியோக நிறுவனம் மற்றும் தெற்கு மின் விநியோக நிறுவனம் போன்றவை மின் கட்டணத்தை 18 சதவிகிதம் உயர்த்த கோரி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த கட்டணத்தை 14 சதவிகிதம் மட்டுமே உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இதன் மூலமாக தெலுங்கானா மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைபெறுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தெலுங்கானாவில் வீடுகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் முதல் ஐம்பது யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.1.45 லிருந்து ரூபாய் 1.95 உயர்த்தப்பட்டுள்ளது.வீடுகளில் 51 முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.2.60 இருந்து ரூ.3.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் சலூன் கடைகள் உட்பட சிறு தொழில்களுக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை என கூறப்பட்டுள்ளது.