Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 போட்டி…. 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி….!!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணிக்கும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 23 ரன்கள் அடித்தார்.

கேப்டன் பாபர் ஆசம் 46 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் 55 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும், ஜோஸ் இங்க்லிஸ் 24 ரன்களை அடித்தார். இதையடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

Categories

Tech |