சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் காயத்ரி மற்றும் அணிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி மற்றும் சீனுராமசாமி இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த திரைப்படம் நான்காவது படம். மாமனிதனின் படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்தப்படம் மே 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் இசை வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் ரிலீசை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.