Categories
மாநில செய்திகள்

இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது…. துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம்…..!!!

கடந்த மாதம் 18 ஆம் தேதி 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்நிலையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அடுத்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் இன்று கூடுகிறது.

முதல் நாளில் நீர்வளத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம், கேள்வி நேரம் முடிந்ததும் நீர்வளத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் தொடங்கும். இந்த விவாதத்தில் பல்வேறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உள்ளனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். கேள்வி நேரத்திற்கும் மானியக்கோரிக்கை வாதத்திற்கும் இடைப்பட்ட நேரம் இல்லா நேரத்தில் சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனால் இன்றைய கூட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Categories

Tech |