“உ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து அந்த மாதிரி புதிய ஐட்டம் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.
தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என தனக்குள் பன்முகத்தன்மையை கொண்டு விளங்குகின்றார் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ” உ சொல்றியா மாமா” என்ற பாடலை பாடியிருந்தார்.
இந்தப்பாடல் கிராமம் வரை ரீச்சாகி முணுமுணுக்க செய்து வருகின்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் புதிய வெப் தொடரில் விஜய் மிர்ச்சி எழுதியுள்ள பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். புஷ்பா படத்தின் பாடலை தொடர்ந்து ஆண்ட்ரியாவின் வித்தியாசமான குரலில் உள்ள இந்த பாடலை மாதத்தின் இறுதியில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறாரகள்.