சன் டிவி புரோமோ வீடியோவில் விஜயை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் சன் தொலைக்காட்சிக்கு 10 வருடங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார் விஜய். சன் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் நெல்சன் பேட்டி எடுக்க விஜய் பங்கேற்றுள்ளார்.
அப்போது நெல்சன் வாக்களிப்பதற்காக காரில் செல்லாமல் ஏன் சைக்கிளில் சென்றீர்கள் என கேட்க விஜய் கூறிய பதில் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் விஜயை பார்த்த ரசிகர்கள் ஏன் அண்ணாவின் உடல் இவ்வளவு மெலிந்து இருக்கிறது எனவும் உடல் சிறியதாகவும் தலை பெரிதாகவும் இருப்பதாக கேட்கின்றனர். கேமரா சரி இல்லை எனவும் தூங்க போகும் நேரத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் எப்படி பார்ப்பார்கள். அண்ணாவை வரவழைத்து அசிங்க படுத்துகிறீர்களா என கேட்கிறார்கள் ரசிகர்கள்.