Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தெலுங்கானா மாநில அரசு ரம்ஜான் மாதத்தையொட்டி அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கி அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகை மற்றும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை என வருடம்தோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் நோன்பு  ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களை காட்டிலும் ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தை பொருத்தவரை எல்லா இஸ்லாமியர்களும் நோன்பு இருப்பார்கள். அதிகாலை 4:00 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருப்பார்கள்.

ரமலான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ரமலான் நோன்பு தொடங்கி இன்று மூன்று நாட்கள் ஆகி உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ்  உத்தரவிட்டிருக்கிறார்.

இதுபற்றி மாநில தலைமை செயலாளர் செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம் அரசு சேவை / ஒப்பந்தம் / வெளியீட்டு வாரியங்களின் பொதுத் துறை ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களது அலுவலகங்களில் இருந்து மாலை 4.00 மணிக்கு வீட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 3, 2022 முதல் மே 2, 2022 வரை அமலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேற்கண்ட கால கட்டத்தில் தேவை ஏற்படும் போது தவிர மற்ற நேரங்களில் மாலை 4 மணிக்கு தங்களது கடமையை ஆற்ற முன்னதாகவே செல்லலாம் இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

Categories

Tech |