பேருந்தின் மேற்கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் நிரம்பியதால் மீதமிருந்த ஆட்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துகொண்டனர். பேருந்து புறப்பட்டு ஜெய்சல்மர் நகரில் போல்ஜி என்ற பகுதி அருகே சென்றபோது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் கூரையின் மீது பயணம் செய்தவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இதில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.