லாரி விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே ஆண்டிமூப்பர் கொட்டாய் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் சொந்த வேலைக்காக சைக்கிளில் தியாகதுருகம் சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மினி லாரி சின்னசாமியின் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மினி லாரியின் ஓட்டுநர் கொழிஞ்சி முத்து என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.