Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்…. மீண்டும் பிரச்சனை?…. பயத்தில் வீரர்கள்….!!!!

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக விளையாடி கடைசி இடத்தில் நீடித்து வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் 14வது சீசனின் நடுப்பகுதியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வில்லியம்சனுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. அணி நிர்வாகம் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நிர்வாகம், கேப்டன் வார்னரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொண்டதாலும் நிர்வாகத்திற்கும், வார்னருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் வார்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என தகவல் வெளியாகியிருந்தது.

அதேபோல் நிர்வாகத்தின் தலையீடு இருந்ததால் ரஷித்கானும் அணியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15வது சீசனுக்கு முன் நடந்த மெகா ஏலத்தின் போது முக்கிய வீரர்களை வாங்காமல் கடைசி நேரத்தில் எய்டன் மார்க்கரம், செய்பர்ட், நிகோலஸ் பூரன் உள்ளிட்ட வீரர்களை வாங்கியது. ஆனால் இரண்டு போட்டிகளிலும் அவர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்று கடைசி இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் தோற்றபோது அணி நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் இருந்தது. ஆனால் இரண்டாவது முறையாக சன்ரைசர்ஸ் தோற்ற போது அணி வீரர்களை வைத்து காவ்யா மாறன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நிர்வாகத்தின் தலையீடு ஏற்பட்டு மீண்டும் பிரச்சனை உருவாகிவிடுமோ ? என்ற அச்சம் வீரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |