Categories
டெக்னாலஜி

பிளே ஸ்டோரில் இருந்து புதிய பரவும் ஆபத்து…. இந்த செயலியை டவுன்லோட் செய்யாதீங்க….!!!

லாப்52 என்ற ஆய்வு நிறுவனம் ப்ராசஸ் மேனேஜர் என்ற புதிய ஸ்பைவேர் ஒன்று  பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. ப்ராசஸ் மேனேஜர் ஆண்ட்ராய்டு மொபைல், போல தன்னை மாற்றிக்கொண்டு பயனாளர்களின் லொகேஷன், நெட்வோர்க், வைஃபை, கேமரா, ஆடியோ செட்டிங்ஸ், கால் லாக், கான்டெக்ட்ஸ், ஸ்டோரேஜ் போன்ற பல அம்சங்களை பயனாளிகளுக்கு தெரியாமலேயே பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் நாம் எப்போது இணையம் பயன்படுத்துகிறோம், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்ற அனைத்து தகவலையும் இந்த ஸ்பைவேர் சேகரிக்கும்.

இது தவிர நாம் வைஃபையுடன் நம் போனை இணைத்திருக்கும்போது அந்த வைஃபையின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து தகவலையும் இந்த மால்வேர் சேகரிக்கிறது. அதன்பின் நமது நோட்டிஃபிகேஷன் பாரில் ‘Process manager is running’ என்று இந்த ஸ்பைவேரின் மெசேஜ் ஒன்று காட்டியபடியே இருக்கிறது. இவற்றை நீக்க முடியவில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த ஆப்பை தெரியாமல் கூட பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் அதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |