இலங்கை அரசிற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தினால், தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், இலங்கையில் இரண்டு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் அமைதியாக பேரணி நடத்துகிறார்கள். மற்றொரு தரப்பினர் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வருகிறார்கள். பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்தும் விதத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.