சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கெடுவிலார் பட்டி பகுதியில் தீபம் அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளை நடத்தும் சிலம்பம் பயிற்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்று வருகின்றனர். இவர்கள் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் கோவாவில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் நேபாள நாட்டில் நடைபெறும் போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் நேபாளம் நாட்டில் நடைபெற்ற போட்டியில் 4 நாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 9 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 9 தங்கம் மற்றும் 3 பதக்கங்களை இந்திய மாணவ-மாணவிகள் வென்றுள்ளனர். தற்போது ஊருக்கு திரும்பிய பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.