உலக மக்கள் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் 99 விழுக்காடு மக்கள் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காற்றின் துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி சென்று நரம்புகள் மற்றும் தமனி களுக்குள் நுழைந்து நோயை உண்டாக்குகிறது.
மேலும் கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காற்றின் தரமானது மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி செல்வது மற்றும் பசுமை ஆற்றலை பெருமளவில் அதிகரிப்பது போன்ற காரணிகளினால் மட்டுமே காற்று மாசுபடுவதை தவிர்க்க முடியும்” என கூறுகின்றது.