Real me நிறுவனம் வருகின்ற 7 ஆம் தேதி திட்டமிட்டுள்ள நிகழ்வில் வைத்து 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவையுடைய real me புக் ப்ரைம் லேப்டாப்பை அறிமுகம் செய்யவுள்ளது.
Real me நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி ரியல் மீ GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு நிகழ்வை திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் வைத்து அந்நிறுவனம் ரியல் மீ புக் பிரைம் மடிக்கணினியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரியல் மீ புக் ப்ரைம் லேப்டாப் 2k தெளிவு திறனை ஆதரிக்கும் 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 50,000 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 100 சதவீத எஸ்ஆர்ஜிபி வருவதாகவும், 400 நிட்ஸ் உச்ச பிரகாசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த மடிக்கணினி 8gp மற்றும் 12gp, 512 ஜிபி என்விஎம் எஸ்எஸ்டி சேமிப்பகத்தை உள்ளடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லப்டாப் விண்டோஸ் 11 ல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள் இருக்கும் படியும், பவர் பட்டனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.