Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் பிளான் போட்டு மக்களை தாக்குகிறது”…. டிஜிபி வெளியிட்ட தகவல்…..!!!!!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் லால் சவுக் பகுதியில் மைசுமா எனும் இடத்தில் பயங்கரவாதிகள் மறைந்து இருந்து திடீரென்று வீரர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து உடனே அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார். இதேபோல் புல்வாமா மாவட்டத்தின் லஜூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் திடீரென்று பொதுமக்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் குடிமக்களில் 2 நபர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் எதிரொலியாக அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் விஷால் குமாரின் உடல் புத்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புத்காம் நகரில் நடைபெற்றது. இதில் ராணுவ உயரதிகாரிகள், வீரர்கள் போன்றோர் வீரவணக்கம் செலுத்தினர். மேலும் காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் இறந்தவர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிங் பேசியதாவது, நாங்கள் இந்த பயங்கரவாத தாக்குதல்களை சகித்து கொள்ளமாட்டோம்.  நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரருக்கு நாங்கள் வீரவணக்கம் செலுத்துகிறோம். அமைதி நீடிக்க தேவையான எங்களது பணி தொடரும் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தானால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த செயல்கள் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத குழுக்களின் விரக்தி மற்றும் அவர்களுக்கு எஜமானர்களாக இருப்பவர்களின் உத்தரவால் நடத்தப்படுகிறது. இருந்தாலும் இதன் காரணமாக நாம் நம் கடமைகளை நிறைவேற்றுவதிலும், அமைதியை உறுதி செய்வதிலும் இருந்து அவை நம்மை தடுக்காது என சிங் கூறியுள்ளார். இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் குற்றவாளிகள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் சென்ற 3 மாதங்களில் 42 தீவிரவாதிகளை ஒழித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |