ப்ளூ நைல் நதியில் படகு மூழ்கிய விபத்தில் 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
சூடான் நாட்டில் தென் கிழக்கு மாகாணத்தில் சென்னார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ப்ளூ நைல் என்ற நதி உள்ளது. இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 29 பெண்கள் நைல் நதியில் படகில் பயணித்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் படகு திடீரென்று நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகை ஓட்டியவரும் 5 பெண்களும் நீரில் நீந்தி உயிர் பிழைத்துள்ளனர். இதனையடுத்து நீரில் மூழ்கி காணாமல் போன 10 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கையில் படகில் அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றியதுதான் என கூறப்படுகிறது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு சூடான் நைல் நதியில் ஒரு படகு மூழ்கிய விபத்தில் 21 மாணவர்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.