ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் படி உதவி கோட்ட பொறியாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.