Categories
சினிமா

WOW: “12-வது முறை பிரபலமான இசையமைப்பாளருடன் கூட்டணி”…. நடிகர் விஷால் வெளியிட்ட பதிவு…..!!!!!

நடிகர் வி‌ஷால் சென்ற 2004ஆம் வருடம் வெளியாகிய “செல்லமே” திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை, சக்ரா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் உருவாகும் லத்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். விஷாலின் 32வது படமான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் தயாராகி வருகிறது.
ராணா புரொடக்சன் சார்பில் ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதற்குமுன் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாம் சி.எஸ் மாற்றப்பட்டு இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனை சமூகவலைத்தளப் பக்கத்தில் விஷால் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “எனது சினிமா வாழ்க்கையில் 12-வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. எனது நண்பர் மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவை லத்தி படக்குழு சார்பில் வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |