சொத்து வரி உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி அதிகரித்துள்ளது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரவிருக்கிறது. இந்த சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதாவது, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வானது தூய்மை இந்தியா, அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களுக்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 83% வீடுகளுக்கு 25% முதல் 50% மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 58% மக்களுக்கு 25% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 7% மக்களுக்கு 100 முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 1.47% மக்களுக்கு மட்டுமே 150% வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வானது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் பொருளாதார ரீதியாக 83% மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலையை போன்றே சொத்து வரியும் உயர்ந்துள்ளது என கூறினார்.