Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற திருவிழா…. சீறிப்பாய்ந்த காளைகள்…34 பேர் படுகாயம்…!!!!

மணிகண்டம் அருகே நடைபெற்ற  ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்துள்ளனர். 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் தானா முளைத்த மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விராலிமலை, லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்துஅழைத்து வரப்பட்ட  179 காளைகள் பங்கேற்றுள்ளது. அதேபோல் மாடு பிடி வீரர்கள் 21 பேர் பங்கேற்றனர்.

அவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளை படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை 7:45 மணியளவில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமல் கருப்பையா போன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதன்பின் முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதற்கு பின்  ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில் சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் பிராட்டியூர் கங்காதரன் (வயது 23), மாட்டின் உரிமையாளர் விராலிமலை ஒன்றியம் விளாப்பட்டி ராஜா (31), பார்வையாளர்கள் ஆவூர் அருகே உள்ள களிமங்கலம் மதி (32), சாத்தனூர் பிரபு (34) ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Categories

Tech |