முசிறி அருகில் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், குளித்தலை பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் 19 வயதுடைய ரகுராம். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது முசிறி அருகில் அய்யம்பாளையம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக ரகுராம் மீது மோதியது. இதனால் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுராம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முசிறி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.