உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததால் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் எதிர்பாராத சில பாதிப்புகள் மற்றும் தொழில் முடக்கங்களை பல நாடுகள் சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் ஸ்விஸ் கைக்கடிகார தயாரிப்பிற்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கைக்கடிகாரத்திற்கு பெயர்போன சுவிட்சர்லாந்து நாட்டில் கை கடிகாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வைரங்கள் பெருமளவில் ரஷ்யாவிடமிருந்து தான் வாங்கப்படுகின்றன.
ரஷ்யாவின் மிகப்பெரிய வைரச்சுரங்க குழுமமான Alrosa தான் சுவிட்சர்லாந்துக்கு பெருமளவில் வைர ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் தற்போது போர் காரணமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால் வைர ஏற்றுமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் கையிருப்பில் உள்ள தங்கம் மற்றும் வைரத்தை வைத்து ஸ்விட்சர்லாந்தில் கைக்கடிகாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இது 6 மாத காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் இதனால் கைக்கடிகாரங்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.