உக்ரைனின் சில பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அங்கு கொல்லப்பட்டு கிடக்கும் சடலங்களின் உடலில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துவிட்டு சென்று சம்பவம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சடலங்களை மற்றவர்கள் அசைப்பதன் மூலம் இதில் உள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு செய்வதன் மூலம் மேலும் அழிவை ஏற்படுத்த ரஷ்ய வீரர்கள் திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிக அருகாமையில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறாக கொல்லப்பட்ட நபர்களின் உடல்களை பிளந்து வெடிகுண்டுகளை நிரப்பி சென்றுள்ளனர் ரஷ்ய வீரர்கள். இது உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சா மற்றும் ஹோஸ்டோமல் பகுதிகளில் மட்டுமின்றி இர்பின் பகுதியிலும் ரஷ்ய வீரர்கள் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அப்பாவி உக்ரைன் மக்களிடம் உங்கள் மகன்கள் நடந்துகொண்டுள்ளதை பாருங்கள் என ரஷ்ய தாய்மார்களிடம் கூறியுள்ளார். இவ்வாறு கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் உடல்களை நீங்கள் பார்க்கவேண்டும். அவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டதற்கு உங்களுக்கு அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் எனவும் அவர் கேட்டுள்ளார்.