Categories
உலக செய்திகள்

புடினுடன் பேச்சுவார்த்தை…. பிரான்ஸ் ஜனாதிபதியை வெளுத்து வாங்கிய போலந்து பிரதமர்….!!!!

ரஷ்ய படைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில் போலந்து பிரதமர் Mateusz Morawiecki, புதினுடன் எத்தனை முறை தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்கள் ? நீங்கள் இத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தி என்ன சாதித்தீர்கள் ? உங்களால் புதினின் நடவடிக்கை எதையாவது தடுத்து நிறுத்த முடிந்ததா ? என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. குற்றவாளிகளுடன் எல்லாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது. அவர்களை எதிர்த்துப் போர் தான் புரிய வேண்டும் என்று கூறி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை வெளுத்து வாங்கியுள்ளார் போலந்து பிரதமர் Mateusz Morawiecki.

Categories

Tech |