நடிகர் ரஜினிகாந்த் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய போது தந்தை பெரியார் சேலத்தில் 1971இல் நடந்த மாநாட்டில் நடத்திய ஊர்வலத்தில் ராமன் , சீதா உருவத்தை நிர்வாணப்படுத்தி , செருப்புமாலை அனுவித்து அழைத்து சென்றார்கள் என்று துக்ளக் ஆசிரியர் சோ துணிச்சலாக எழுதினார். பெரியார் ராமர் சீதையை நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வந்து , செருப்பு மாலை போட்டார் என்ற தகவலை துணிந்து கண்டித்து எழுதியவர் துக்ளக் சோ ஒருவர்தான் மற்ற பத்திரிகைகள் தயங்கிக் கொண்டிருக்கும் போது அவர் தான் தூணிச்சலாக சொன்னார் என்று ரஜினி கூறினார்.
இதற்க்கு திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி பெரியார் குறித்து அவதூறு பரப்புகின்றார் என்றும் , அவர் மன்னிப்பு கேட்கவேண்டுமென்றும் கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கபோவது இல்லை என்றும் , பின்வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து பேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கூறுகையில் , ரஜினி துக்ளக் பத்திரிக்கையை ஆதாரமாக காட்டாமல் 2017_ஆம் ஆண்டில் வந்த வேறு எந்த பத்திரிக்கையையோ காட்டுகின்றார். அவர் நியாயமாக காட்டவேண்டியது துக்ளக் பத்திரிக்கை தானே. துக்ளக் பத்திரிக்கையில் ராமனோ சீதையோ நிர்வாணமாக காட்டி இருக்கிறார்களா ? அவர் கழுத்தில் செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக வந்ததாக அவர் ஆதாரம் எடுத்துக் காட்ட முடியுமா ? என்று கேள்வி எழுப்பினார்.
ரஜினி கூறுவது சரியான தகவல் இல்லை , உண்மைக்கு மாறானது என்று அதிகாரபூர்வமானவர்கள் நாங்கள் சுட்டிக் காட்டியபோது அவர் தன்னை திருத்திக் கொண்டு இருக்க வேண்டுமானால் அதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது , நான் சொன்னது சொன்னதுதான் என்று அவர் பிடிவாதமாக பேசுவது அவருடைய பண்பாட்டைக் காட்டுகிறது. ரஜினி ஆதாரங்கள் நிரூபித்துக் காட்டவேண்டும். இல்லையென்றால் அவர் நீதிமன்றத்திலேயே பதில் சொல்லவேண்டி இருக்கும் என்று கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.