Categories
அரசியல்

வினாத்தாள் கசிவு…. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்…. இல்லனா நம்பிக்கை போய்டும்….  அன்புமணி ராமதாஸ்….!!!

பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியிருந்தன. அதற்காக ஒரு மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு யார் காரணம்? அடுத்தடுத்து வினாத்தாள்கள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விடும். வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |