Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக தமிழ்நாடு ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக பல ஏழை எளிய மக்கள் இலவசமாக பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த நிலையில் தற்போது விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய அட்டை கோரி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்றும், புதிய அட்டை கேட்டு மனு கொடுத்தவர்களின் விவரங்களைப் பதிவேடுகளில் ஏற்றி மனு எந்த நிலையில் உள்ளது என்பதைப் பற்றி பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் சிரமத்தை குறைக்க உடனடியாக புதிய ரேஷன் அட்டைகள் உரியவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |