எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு 2 வருடங்களில் முடிவடையும். இந்த அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் 5-வது தளத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 50 மாணவர்கள் படிக்க இருக்கும் நிலையில் 37 மாணவர்கள் வகுப்புக்கு வந்துள்ளனர். இந்த மாணவர்களை செயல் இயக்குனர் ஹனுமந்த் ராவ், துணை இயக்குனர் லெப்டினன்ட் கலோனஸ் பரம்வீர் சிங் ஜாம்வால், உதவிப் பேராசிரியர்கள் வரவேற்றனர். அதன்பின் நிர்வாக செயல் இயக்குனர் கூறியதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 200 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இருக்கிறது. இங்கு 750 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்படும். இந்தப்பணி 6 மாதங்களுக்குள் தொடங்கப்பட்டு 2 வருடங்களில் முடிவடையும்.
மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு கல்லூரியில் நடைபெறும். அதன்பிறகு கட்டுமான பணிகள் முடிவடைந்தவுடன் புதிய கட்டிடத்திற்கு மாணவர்கள் மாற்றப்படுவார்கள். மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 2 தளங்களில் மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டு நவீன சமையலறை மற்றும் டைனிங் ஹால் வசதியும் செய்து கொடுக்கப்படும். இந்த மாணவர்களுக்கு தற்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். மதுரை எய்ம்ஸ் கல்லூரி மருத்துவமனைக்கு 183 பேர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும். எய்ம்ஸ் மருத்துவமனையில் தொற்று நோய்களுக்கு 160 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி மருத்துவமனை அமைக்கப்படும். ஜம்மு-காஷ்மீரில் தற்காலிக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.