Categories
மாநில செய்திகள்

காவல் உதவி செயலி உருவாக்கம்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!!!!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காவல் உதவி செய்ய செயல்பாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், ‘காவல் உதவி’ செயலியை தொடங்கி வைத்துள்ளார்.அப்போது
இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சைபர் கிரைம் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, மாநில குற்ற ஆவண பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கேடே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் போலீசாரின் உதவியை உடனடியாக பெறும் வகையில் சிறப்பம்சங்களுடன் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியானது இந்திய மாநிலங்களின் காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்குகிறது.  பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவசர காலங்களில் இந்த செயலியில் சிவப்புநிற அவசரம் என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக பயனாளர் விபரம், தற்போதைய இருப்பிடம் மற்றும் வீடியோ கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவைக்கு வழங்கப்படுகிறது. மேலும் பயனாளர்கள் செல்போனில் நேரடி புகார்களை தெரிவிப்பதற்கு டயல் 100 என்ற செயலியை காவல் உதவி செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

மகளிர், சிறார்கள், முதியோர்கள் அவசர கால புகார்களை, படங்கள், குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, செல்போனில் புகாரை பதிவு செய்துக்கொள்ளலாம். பயணங்கள் மேற்கொள்ளும்போது, அவசர காலத்தில் பயனாளர்கள், ‘வாட்ஸ் அப்’, ‘கூகுள் மேப்’ வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்து.

தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை, தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார், சி.எஸ்.ஆர், எப்.ஐ.ஆர். குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடக சேவைகள், காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி, ‘112 இந்தியா’ ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம். இச்செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

Categories

Tech |