Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லை பெரியாரை நம்பி….. 14,707 ஏக்கரில் 2ஆம் போக நெல் சாகுபடி….. பணியில் மும்முரம் காட்டும் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கேரள மாநிலத்தின்   முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல் போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது. 

இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் முழு அளவில் நிறைவடைய உள்ள நிலையில், இரண்டாம் போக சாகுபடிக்கு நிலங்களை உழுது சமன் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை முடியும் வரை அணையின் நீர்மட்டம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது  பணியை செய்து வருகின்றனர். 

Categories

Tech |