Categories
மாநில செய்திகள்

“தமிழக ரேஷன் கடைகளில்”…. இனி தரமான பொருட்கள்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் அரிசியில் கல், மண், குப்பைகள் போன்றவைகள் இருப்பதாகவும், சமைத்து உண்ண முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை அரசு எடுத்து தரமான அரிசியை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமான அரிசி வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தேரூர் பகுதியில் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |