சென்னை திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு வீடுகளை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சீமான் அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
சீமான் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சீமானின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நலம் விசாரித்தனர். அதோடு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சீமானை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.