அக்னிச் சிறகுகள் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.
இயக்குனர் நவீன் மூடர்கூடம் படத்தை எழுதி, இயக்கி, நடித்து உள்ளார். இது தமிழில் நவீன சினிமாக்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதையடுத்து கொளஞ்சி என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது நவீன், அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் அருண் விஜய், விஜய் ஆண்டனி முதன்முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த ஆக்சன் திரைப்படம் பற்றிய அப்டேட்டை, தற்போது நவீன் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 2013-ல் வெளியான முதல் படத்திற்கு பிறகு, நவீன் இயக்கத்தில் அடுத்த படம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அக்னிசிறகுகள் தான் 2-வது படமாக வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், ரெய்மா சென், சென்ட்ராயன், சதீஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.மேலும் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரில் எடுக்கப்பட்ட அக்னிச் சிறகுகளின் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகள் இப்படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்னிச் சிறகுகள் படம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட சிஜி பணிகள் நடந்து வருவதாகவும், இதனால் விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் எனவும் பாஸிட்டிவான அப்டேட்டை இயக்குனர் நவீன் வெளியிட்டுள்ளார்.