ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது வினியோகத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயிலின் போன்றவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மட்டும் வெளியான நிலையில் அகவிலைப்படி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதன்காரணமாக ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிகளுக்கான கூடுதல் பதிவாளர் அனைத்து மண்டலங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் எம்.எல்.ஏ ராமலிங்கத்திடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். இதில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தரவேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் விரைந்து எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.