அண்ணா பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் உள்ள பாடத்திட்டங்கள் அடுத்த மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வெகு நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை நேரடி முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாம் அலை பரவத் தொடங்கி பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் செலுத்த தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் இளங்கலை பட்டப் படிப்புகளில் பாடத்திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து துறைத் தலைவர்கள், நிபுணர்களின் பரிந்துரைகளை பகுப்பாய்வு செய்து, பாடத்திட்டத்தில் சிறந்தவற்றை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில்துறை தேவைகள் மற்றும் மாணவர்களின் திறன் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய பாடத்திட்டம் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு 2ம் செமஸ்டரிலேயே கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.