வோடாபோன் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அவ்வாறு 327 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் 30 நாட்களுக்கு வழங்கப்படும். அதனைப் போலவே 337 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்புகள் 31 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் இதனுடன் விஐ மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வோடாபோன் பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
