மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே ஒரு சிறிய கிராமம் அமைந்துள்ளது.மன்ங்சிலு பாமேய் 11 வயதாகும் இந்த சிறுமி தனது வகுப்பறையில் சகோதரனின் மடியில் கிடத்திக்கொண்டு பாடங்களை கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விவசாய நிலத்தில் வேலை செய்ய தங்களது பெற்றோர் சென்றுவிட, பிறந்து சில மாதங்கள் ஆன தனது சகோதரனை பார்த்துக்கொள்ளும் பொறுப்புடன் படிக்கவேண்டும் என்ற உந்துதலும் போட்டிபோட்டு இறுதியில் வென்றது இரண்டுமே.
பொறுப்பையும், கல்வியின் மீதான ஆர்வத்தையும் ஒருசேர கவனிப்பது என இந்த சிறுமி முடிவெடுத்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டருகே இருக்கும் பள்ளியில் பாடம் பயின்று வருகிறார். இவருக்கு இந்த பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து மொத்தம் நான்கு சகோதரிகள் உள்ளனர். இந்த சிறுமியின் குறித்த தகவலை பார்த்த பல தரப்பினரும் சிறுமியின் கிராமத்திற்கு ஓடிச்சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் குழந்தைகளுக்கான சேவை குழுவினரை அந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்து சிறுமியின் குடும்பத்திற்கு உதவுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் மணிப்பூர் அமைச்சர் ஒருவர் இந்த சிறுமியின் கல்விச் செலவு முழுமையாக ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். தற்போதைய மாணவ, மாணவிகளுக்கும் சிறார்களுக்கும் இந்த சிறுமி ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். ஏழ்மையோ வாய்ப்போ, மறுப்போ கல்விக்கு எப்போதும் ஒரு தடையாக இருக்காது என பலரும் மனிங்சிலுவை மனதார பாராட்டி வருகின்றனர்.