Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீர் வாகன சோதனையில் போலீசார்… வசமாக சிக்கிய வாலிபர் கைது…!!!!!

தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமாள், அருள், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் தர்மபுரி, புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் புலிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் பாலக்கோடு அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர். இவர் 16 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை  பெங்களூருக்கு கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் இடங்கள் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |