தமிழகத்தில் கொரோணா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்தும் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என கூறியுள்ளது.
இதையடுத்து முகக்கவசம் அணிய அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் கொரோனா வழிகாட்டுதல்களை பொது மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும். தடுப்பூசி கட்டாயம் இல்லை கூறப்பட்டுள்ளதே தவிர போடக்கூடாது என கூறப்படவில்லை. எனவே மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.