தமிழ் சினிமா உலகில் விஜய் டிவி மூலமாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் டாப் டென் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரானார். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்விகளை சந்தித்தது.
இதனையடுத்து கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் கைகொடுத்தது. அது அவரது மார்க்கெட்டை மீட்டெடுக்க பெரிதும் உதவியது. நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நெல்சன் பீஸ்ட் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க இருக்கிறார்.
தலைவர் 169 என்று அழைக்கப்பட்டு வரும் இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நெல்சனிடம் எவ்வளவு சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி நான் தலைவர் உடன் நடிக்க வேண்டும் என கூறியுள்ளாராம் சிவகார்த்திகேயன். இதனையடுத்து நெல்சனும் சிவகார்த்திகேயனை ரஜினியுடன் நடிக்க வைத்து உள்ளதாக தெரியவருகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினியின் மகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.