நட்சத்திர ஹோட்டலின் இரும்பு கேட்டை காரால் மோதி வாலிபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி கத்திபாராவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வாலிபர் ஒருவர் காரில் சென்றுள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் இருக்கும் மதுபான பாருக்கு சென்ற வாலிபரிடம் வயது குறைவாக இருப்பதால் மது அருந்த அனுமதி கிடையாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வாலிபர் சத்தம் போட்ட படி வெளியே வந்து காரை வேகமாக இயக்கி சென்றுள்ளார். அப்போது வாலிபர் சென்ற வேகத்தில் இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு சாலையின் நடுவே கார் சிக்கியதால் மீனம்பாக்கம் நோக்கி சொல்லமுடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் முகப்பேர் சேர்ந்த கல்லூரி மாணவரான ஆகாஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்த அகாஷை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இரும்பு கேட்டுக்குள் சிக்கிய காரை காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.