Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாட சென்ற சிறுமி… சீரழித்த கயவன்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர்.

காலையில் அங்கிருந்து சில அடி தூரத்தில் உள்ள முட்புதரில் காயங்களுடன் சிறுமியின் உடல் ஆடை கிழிந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து கூறியுள்ளனர். உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |